Tuesday, June 7, 2011

ரபேல் நடால்

ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஆறாவது முறையாக வெல்கிறார். நடால், பெடரர் எப்போது மோதினாலும் பெடரர் Fan என்பதை தாண்டி நடாலே வெற்றி பெற மனம் கேட்கும் .


2005 , கல்லூரியின் கடைசி வருடத்தில் CTS , Campus Interview வந்திருந்தார்கள்.நாலு வருடங்களில் படித்ததை ஒரு இரவில் FAQ ல் மேய்ந்து ,காலையில் செய்தி தாளின் முதல் பக்கத்தை புரட்டி விட்டு சென்றேன். எனது பெயர் அழைத்தார்கள்.

என்னை அறிமுகப்படுத்தி விட்டு கேள்வி கேட்பவரும் அறிமுக படுத்திக்கொண்டார்.

"இன்னைக்கு பேப்பர் படித்தாயா" என்றார்.
"யெஸ் சார்," என்றேன்
"என்ன தலைப்பு செய்தி "
"நடால் பிரெஞ்சு ஓபன் வென்றிருக்கிறார்"
"யாரது நடால்?"
"19 வயது ஸ்பெயின் வீரர் "


பின் கொஞ்சம் டெக்னிகல் கேள்விகளை கேட்டு பின் அடுத்த நாள் CTS Selected லிஸ்டில்  எனது பெயரை அறிவித்தார்கள் .

எப்போதும் நடால், பெடரர் மோதினாலும் பெடரர் Fan என்பதை தாண்டி நடாலே வெற்றி பெற மனம் கேட்கும் .